26 ஏப்ரல், 2010

Clash of the Titans [2010] - மர்மதேசம்

Clash of the Titans [2010] - மர்மதேசம்..


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ராம நாராயணன் பெருமையுடன் வழங்கும் மர்மதேசம்.
.
பையா ஹவுஸ்புல். என்பதனால்தான் இத்திரைப்படத்திற்க்குள் நுழைந்தேன். கொஞ்சம் இத்திரைப்படத்தை எதிர்பார்த்திருந்தேன். சரி இந்த படத்தை விடுங்க. இந்த படம் போடும்முன் ராம நாராயணனிடமிருந்து அடுத்து வரப்போகும் அந்த "குட்டிபிசாசு (யாருக்கும் அடங்காதவள்)" திரைப்படத்தின் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. உலகத்தின் ஒட்டுமொத்த கொடுமையை மூன்று நிமிடத்தில் அனுபவிக்க வைத்தார்கள். ஒரு சிறு பெண் குழந்தையும், பாபா காரும், குத்தாட்டம் ஆடிய Transformer-ம், பாம்பும் என கிராபிக்ஸ் கொடுமை. அந்த குட்டிப்பெண், ராம நாராயணனின் பேத்தியாக இருக்குமோ!!!!
ஸப்பாஆஆஆஆஆஆ...
.
சரி நாம் மர்ம தேசத்துக்கு வருவோம். கிரேக்க இதிகாச புனைவுக்கதை. இந்த மாதிரியான படத்தில் நீங்க என்னென்ன எதிர்பாப்பீர்களோ, அது அப்படியே அச்சுபிசகாமல் கொடுத்திருக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான போர். மனிதர்களை அடக்க கடவுள்களின் தந்திரம், மந்திரம். வழக்கமான கிராபிக்ஸ் தேள்கள், முகம் குலைந்த சூனியக்காரகள், மனிதர்கள், கடவுள்கள், மனிதருக்கும் கடவுளுக்கும் இடையிலானவர்கள், கடவுளுக்கும் மனிதருக்கும் தவறான உறவில் பிறந்தவர்கள், பறக்கும் குதிரை (Pirates of the caribean, lord of the ring, narnia, harry potter, 300, mummy, meet the spartans :)) எல்லாமே பழசாவே இருந்தது. avatar திரைப்படத்தை IMAX 3D-யில் பார்த்துவிட்டதால் இந்த படத்தின் தொழில் நுட்பங்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஹாலிவுட்டின் வழக்கப்படி பெரிய வில்லன் சடாரென்று புஸ்ஸாகிவிடுவதும் எதிர்பார்த்த ஒன்றே. வழக்கம் போல் இரண்டாம் பாகத்திற்கான அடிக்கல்லை நாட்டி விடுகிறார்கள்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு 30 செகன்ட் செலவு பண்ணி, ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க..